• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாங்கள் அமித்ஷாவை மண்ணைக் கவ்வ வைப்போம்-ரகுபதி..,

ByS. SRIDHAR

Jan 5, 2026

புதுக்கோட்டையில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி.

புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு நிலையில்லா லேப்டாப் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளரிடம் கூறுகையில்,

ரேஷன் கார்டுக்கு இன்று 3000 ரூபாய் கொடுத்துள்ளோம்.

இதுவரை தமிழக வரலாற்றில் 2500க்கு மேல் கொடுக்கப்படவில்லை.

3000 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டு விடுவார்கள் என நம்புகிறீர்களா..?

எங்களது திட்டங்களை வைத்து தான் மக்கள் ஓட்டு போடுவார்கள்.

எங்களது திட்டங்கள் மக்களை சென்றடைந்துவிட்டன.

தமிழகத்தில் நாங்கள் அமித்ஷாவை மண்ணைக் கவ்வ வைப்போம்,

உதயநிதியை முதலமைச்சர் என்று நாங்கள் எப்போதும் நாங்கள் சொல்லவில்லை.

துணை முதலமைச்சர் என்றுதான் கூறி வருகிறோம்.

இந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் தான்.எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைவராக வரலாம்.தேர்தல் பணிக்காக அவர் இன்று சுழன்று பணியாற்றி வருகிறார்.

ஊழல் குற்றச்சாட்டு குறித்து கருத்து சொல்கிற தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை அவர்தான் ஒண்ணாம் நம்பர் ஊழல்வாதி,

அமித்ஷா மேடை ஏறுவதற்கு தாமதமாவதற்கு கூட்டம் இல்லாததே காரணம்
தமிழகத்தில் அமித் ஷாவுக்கு இடம் கிடையாது
பாஜக பருப்பு தமிழகத்தில் ஏகாது

பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை முதலில் கூட்டணி கட்சிகளின் கூட்டம் தான் என்று அவர்கள் அறிவித்தார்கள்
ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளவில்லை அமித்ஷா சொல்வதை கூட்டணி கட்சிகளிடமே நடக்கவில்லை அப்புறம் எங்கு வெளியே நடப்பது

தமிழக அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் கூறுவது தான் வேடிக்கையானது

ரேஷன் கார்டுக்கு 3000 ரூபாய் உங்களுக்காக கொடுக்கிறோம்
இந்திய வரலாற்றிலேயே 2500க்கு மேல் பொங்கல் பரிசு கொடுக்கப்படவில்லை ஆனால் தற்போது தமிழக அரசு 3000 ரூபாய் அறிவித்துள்ளது
திட்டங்களை வைத்து தான் மக்கள் வாக்களிப்பார்கள் பரிசு பொருளோ இல்லாமல் வாங்கிக் கொண்டு மக்கள் வாக்களிப்பார்களா

எங்களுடைய திட்டம் அனைத்து மக்களுக்கும் சென்று சேர்ந்து அடைந்துள்ளது ஆதலால் எங்களுக்கு அவர்கள் வாக்களிப்பார்கள் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அது எங்கள் பிரச்சனையாகாது இந்தியா கூட்டணி தமிழகத்தில் மிக பலமாக உள்ளது இங்கிருந்து எந்த கட்சியும் வெளியே செல்லாது.

மாநிலத் தலைவர் செல்வம் பெருந்தகை இதை உறுதிப்படுத்தியுள்ளார் மானிக் தாகூர் ஜோதி மணியோ சொல்வது அவர்கள் கருத்து ஜோதி மணியை தூக்கி தாங்கி பிடித்தது திமுக தான்

காங்கிரஸ் தலைமை முடிவு இறுதியானது காங்கிரஸ் தலைமை திமுகவோடு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதற்கு குழு அமைத்துள்ளது

எங்களுடைய வெற்றி தெளிவாக உள்ளது தைரியமாக நாங்கள் உள்ளோம். எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படக்கூடிய அவசியம் கிடையாது எங்களுக்கு அடுத்தது யார் என்பது தான் தற்போது பிரச்சனை

திமுகவை தோற்கடித்து தீர்வோம் என்று அமித்ஷா கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் தமிழகத்தில் அமித்ஷாவையே நாங்கள் மண்ணை கவ்வ வைப்போம்

முதல்வர் கனவு சில தினங்களுக்கு முன் அறிவித்த ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் எந்த எதிர்மறை கருத்துக்களும் அவர்களிடம் இருந்து வரவில்லை

90 நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அண்ணாமலை கூறி வருகிறார் எந்த 90 நாட்கள் என்று அவர் தெரிவிக்கவில்லை 40 45 60 என்று கூறவில்லை அண்ணாமலை எதையாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்
அதைப்பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட அவசியமில்லை
தமிழக அமைச்சர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி வருகிறார்கள் என்று நேற்று அமித்ஷா கூறியுள்ளார் நாங்கள் எங்கும் வெள்ளை பெயிண்ட் அடிக்கவில்லை

திமுக மீது எதையாவது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக கரூர் சம்பவத்திற்கும் செந்தில் பாலாஜிக்கும் சம்பந்தம் உள்ளது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி வருகிறார்
எங்கள் படியையும் எங்கள் மீது போட முடியாது

தமிழகத்திற்கு வழக்கமாக ஒதுக்க வேண்டிய நிதியை தான் மத்திய அரசு ஒதுக்கி வரது

நாங்கள் சிறப்பு நிதி எதுவும் வரவில்லை என்றுதான் நாங்கள் கூறுகிறோம்

மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கும்போது தமிழகத்தை மற்றும் மத்திய அரசு வஞ்சிக்கிறது

தமிழகத்தில் அனைவரும் போராடுவதற்கு அரசு உரிமை அளித்துள்ளது அமித்ஷா தவறான தகவலை கூறுகிறார் அனுமதி பெற்று பல போராட்டங்கள
நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறப் போகிறது என்று எடப்பாடி பகல் கனவு கண்டு வருகிறார்.

பாஜகவை எடப்பாடி முதலமைச்சர் என்று கூறவில்லை
எங்களுடைய கூட்டணி வலுவாகத்தான் உள்ளது