• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பெரிய புராணம் பேச வேண்டும் பெரியார் புராணம் அல்ல..,

ByPrabhu Sekar

Jul 26, 2025

தூத்துக்குடி செல்வதற்காக சென்னை வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

4300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். தென்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனுடையதாக இந்த விரிவாக்கம் இருக்கும்.

கங்கைகொண்ட சோழபுரம் மூலம் கங்கைக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய இணைப்பு இருந்தது என்பதை ராஜராஜசோழன் அன்றே உறுதிப்படுத்தி இருக்கிறார். அதை இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்படுத்துகிறார். இதுதான் நமது நாட்டின் ஆன்மா வேற்றுமையில் ஒற்றுமை.

ஆனால் தமிழகத்தில் பிரிவினைப் பேசி ஒற்றுமைக்கு மிகப் பெரிய பாதகம் ஏற்படும் அளவிற்கு பல குரல்கள் எழுகிறது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது

பெரிய புராணம் தான் அதிகப்படியாக பேச வேண்டும் பெரியார் புராணம் அல்ல ஏனென்றால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நீர் மேலாண்மை இருந்திருக்கிறது விவசாயம் இருந்திருக்கிறது நமது சோழ மன்னர்கள் ஆன்மீகத்தோடு தான் சேனை வளர்த்தார்கள் அதனால் தான் காவி தமிழ் தான் அதிகமாக வளர்க்கப்பட்டது என நான் கூறினேன்

இன்று முதலமைச்சர் அண்ணன் மு.க ஸ்டாலின் அவர்கள் சோழ ஏரிக்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடி வந்த பிறகுதான் கங்கைகொண்ட சோழபுரத்திற்கான கவனமே திரும்பி உள்ளது என்பது தான் ஆச்சரியமான ஒன்று.

தமிழக முதலமைச்சர் சந்திப்பதை விட தமிழகத்தை பற்றி பிரதமர் அதிகமாக சிந்திக்கிறார். அண்ணன் மு க ஸ்டாலின் அவர்கள் வீடு வீடாக சென்று பாஜக நிதி தரவில்லை என்பதை கூறுங்கள் என தெரிவித்தார். அதேபோன்று வீடு வீடாக சென்று இப்பொழுது 4300 கோடி ரூபாய் திட்டங்களையும் துவங்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி என்பதை கூறுங்கள் நானும் கூறுகிறேன்.

38 மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் நீரழிவு நோய்க்கான டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் ஒரு லட்சத்து 46 ஆயிரம் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ளது அதோடு 1200 கோடி ரூபாய் தமிழகத்தில் உள்ள மருத்துவ திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதையும் போய் திமுகவினர் மக்களிடம் கூறுங்கள். இது இப்பொழுது நடந்தது மட்டும் தான் இதற்கு முன்பு 10 லட்சம் கோடிக்கு மேல் வந்துவிட்டது.

அண்ணன் ஸ்டாலின் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அதோடு தனியார் மருத்துவமனையில் அமர்ந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் வீடியோ காலில் பேசுவதை விட அரசு மருத்துவமனையில் சிகிச்சை ஏன் வரவில்லை ஆஞ்சியோகிராம் சிகிச்சை இல்லையா எனக்கு எந்த பாரபட்சமும் இல்லை. ஆனால் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் நோக்கம்.

செந்தில் பாலாஜியின் தம்பி வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெறுகிறார். இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் வெளிநாடு செல்வார்கள் அப்படி இல்லை என்றால் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் பாரத பிரதமர் அரசு மருத்துவமனைக்கு சென்று தான் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.

அவர் சிகிச்சை எடுப்பது பற்றியோ மருத்துவமனை செல்வது பற்றியோ நான் கருத்து கூற விரும்பவில்லை. இதை மக்களுடன் மக்கள் நாங்கள் இருக்கிறோம் என கூறுவதால் கூறுகிறேன் இல்லை என்றால் அதை நான் கூற விரும்பவில்லை. மக்களுடன் ஸ்டாலின் எனக் கூறிவிட்டு மக்களுக்கு எல்லாம் கொடுத்து விட்டேன் என கூறும் பொழுது இதை பேச வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மரியாதைக்குரிய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் கிட்னி திருட்டு எல்லாம் நடக்கவில்லை இது ஒரு முறைகேடு எனக் கூறுகிறார். நமது வீட்டிற்கு திருடன் வந்து விட்டால் திருட்டு எல்லாம் நடக்கவில்லை. ஏதோ முறைகேடாக எடுத்துச் சென்று விட்டான் என கூறுவோமா இதை பூசி முழுகுவதன் மூலம் எவ்வளவு பிரச்சனை உள்ளது என்பதை உணர முடிகிறது. இதன் மூலம் ஏழை பாமர மக்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அந்த மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை லைசென்ஸ் ரத்து செய்து விட்டோம் என கூறுவது மட்டுமல்ல. இதில் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர்கள் பங்கு எடுத்து பங்கெடுத்துள்ளார்கள். இதில் பாலியல் தொல்லையாக இருந்தாலும் சரி கொலை கொள்ளையாக இருந்தாலும் சரி கிட்னி திருட்டு இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் திமுகவினருக்கு பங்கு இருக்கிறது என்பது மிக வேதனையான ஒன்று.

பீகாரில் நடந்து கொண்டிருக்கும் சீர்திருத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது முறைகேடு எனக் கூறுகிறார்கள். இங்கு கிட்னி திருட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது முறைகேடாம் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியல் உள்ளது. அதை அகற்ற வேண்டும் என திமுகவை போன்றவர்கள் இதுபோன்று வாக்காளர்களின் வைத்து தான் வெற்றி பெறுகிறார்கள்.

நேரடியாக முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது என்பது தான் உண்மை இதில் வேடிக்கை என்னவென்றால் 15 வருடங்களுக்கு முன்பு சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறுகிறார். அதற்கு முன்னால் எவ்வளவு நடந்திருக்க வேண்டும். நீங்கள் எதுவும் செய்யாததால் தான் நாடு முன்னேறாமல் இருக்கிறது கடந்த 11 ஆண்டுகளாக இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக வீர நடை போடுகிற பிரதமராக நமது பிரதமர் இருக்கிறார். இன்று ஜாதி வாரி கணக்கெடுப்பு நாம் நடத்துகிறோம்.

என்பதால் 15 வருடத்திற்கு முன்பு நடத்தி இருக்க வேண்டும் என கூறுகிறார். இதுபோல்தான் 15 வருடத்திற்கு முன்பு ஏற்படுத்தி இருக்க வேண்டிய வளர்ச்சியை நீங்கள் ஏற்படுத்தவில்லை என்பது என்னுடைய கருத்து தி நகர் பகுதியில் மட்டும் 20 ஆயிரம் வாக்காளர்கள் இல்லை தேர்தல் நடக்கும் பொழுது.

தம்பி அண்ணாமலையின் தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் இல்லை என கூறினார்கள். அதனால் கண்டிப்பாக வாக்காளர் திருத்தம் தமிழகத்திலும் இருக்க வேண்டும். இதற்கு பதற வேண்டியது ஒன்றுமில்லை இறந்தவர்களின் பெயர்களை தான் இருக்கிறார்கள் திமுகவினர் ஏன் பதறுகிறார்கள் என்றால் இறந்தவர்களின் வாக்காளர் பெயர்களை வைத்து தான் வெற்றி பெற்று கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அது போன்று முறைகேடான வாக்காளர் பட்டியல் தமிழகத்திலும் நீக்கப்பட வேண்டும் எனக் கூறி புறப்பட்டு சென்றார்.