• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்க வேண்டும்..,

BySeenu

Nov 5, 2025

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க, உண்மையான அ.தி.மு.க இல்லை என தேர்தல் ஆணையத்திடம் சொல்லி இருப்பது எந்த அடிப்படையில் என்ற கேள்விக்கு

“பின்னால் இதுகுறித்து நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” என பதில் அளித்தார்.

அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்து இருந்து பாருங்கள் என தெரிவித்த அவர், நல்லதே நடக்கும் என பதில் அளித்தார்.

இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கும். “நல்லதே நடக்கும்” என பதில் அளித்தார். மேலும் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தில் 250 பக்கம் இருக்கிறது, அதை வெளியில் சொல்ல முடியாது, அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கிறது
எனவும் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து இருப்பதை வெளியில் சொல்லக் கூடாது என விதிகள் இருக்கிறது எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அ.தி.மு.க எந்த மாதிரியான குடும்ப கட்சியாக இருக்கின்றது என்ற கேள்விக்கு, உங்களுக்கு எல்லாம் தெரியும் , மீடியாவில் வந்து கொண்டு தான் இருக்கிறது, அதை நான் சொல்ல தேவையில்லை என பதில் அளித்த செங்கோட்டையனிடம்,
உங்களை பா.ஜ.க இயக்குகிறதா ? என்ற கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த அவர், 53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன், என்னை தனிபட்ட முறையில் யாரும் இயக்க முடியாது என தெரிவித்தார்.

மூத்த அரசியல்வாதியான உங்களை நீக்கி இருக்கின்றார்களே என்ற கேள்விக்கு ,
இது அவரிடம் (எடப்பாடி பழனிச்சாமி) கேட்க வேண்டிய கேள்வி என பதில் அளித்தார்.
மனோஜ் பாண்டியன் அ.தி.மு.க வில் இருந்து தி.மு.க வில் இணைத்து இருப்பது குறித்த கேள்விக்கு , அது அவருடைய விருப்பம் என பதில் அளித்தார்.

அ.தி.மு.க வின் குடும்ப ஆதிக்கம் குறித்த கேள்விக்கு, கட்சியில் மகன் தலையிடுகின்றார் , மைத்துனன் தலையிடுகின்றார் , மாவட்டத்தில், தொகுதிக்குள் எல்லாம் வந்து கொண்டு இருக்கிறனர் எனவும், கட்சியில் மருமகன் தலையீடும் இருக்கிறது எனவும், எங்கெங்கு இயக்குகின்றனர் என்பது மீடியாவுக்கு தெரியாதது கிடையாது. அதனால் அதைப் பற்றி சொன்னேன் என தெரிவித்தார். இது
மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

அ.தி.மு.க தலைவர்கள் தி.மு.க வில் தொடர்ச்சியாக இணைந்து வருவது குறித்த கேள்விக்கு “அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என பதில் அளித்த செங்கோட்டையனிடம், அ.தி.மு.க தரப்பில் இருந்து யாராவது பேச்சுவார்த்தை நடத்துகின்றனரா என கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் அளித்த அவர், யார் ? யார் ? பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும், எனக்கும் தான் தெரியும் எனவும், அதை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது எனவும் தெரிவித்தார். பேச்சுவார்த்தை நடப்பது உண்மையா என்ற கேள்விக்கு, “உறுதியாக” என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து சென்றார்.