அண்மையில் பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்ததால் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் அமைப்பு செயலாளரும் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான கரூர் சின்னசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது அவரது தனிப்பட்ட விருப்பம். அதிமுகவில் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கின்றனர். இதில் யாரை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறுகிறார்.
டிடிவி தினகரன், செங்கோட்டையன் போன்றோர் திமுகவின் தூண்டுதலின் பேரில்தான், இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர். 2026-ல் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர், இதை யாராலும் மாற்ற முடியாது என்றார்.