சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் பா.ஜ.க. மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய அங்கீகாரத்தையும் பெருமையும் தந்து இருக்கிறார் பிரதமர் மோடி. பா.ஜ.க. கட்சி நீண்ட வருடங்களுக்கு பிறகு துணை ஜனாதிபதியாக தமிழர் ஆவதற்கு பிரகாசமாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தான் வெற்றி பெற போகிறார். சிபி ராதாகிருஷ்ணன் கொங்கு மண்டலத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதி. மிக நீண்ட காலம் தமிழக பா.ஜ.க. வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றியவர். அவருடைய தேர்தல் காலத்தில் அவருக்கு கீழ் பணியாற்றியது பெருமையாக உள்ளது.
ஆண்டுதோறும் நாட்டில் தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க. எது செய்தாலும் அது தேர்தலுக்காக என்று சொல்வதா. தேர்தலை தாண்டி தமிழகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு. காமராஜர் காலத்திற்கு பின் தேசிய அரசியலுக்கு தமிழர்கள் செல்லும் எண்ணிக்கை குறைவானது. காங்கிரஸ் கட்சியில் கூட ஒரு சிலரை தவிர தேசிய ஆளுமை என்று யாரையும் பார்க்க முடியவில்லை. இப்போது பா.ஜ.க. அந்த நிலைமை மாற்றி கொண்டு இருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருப்பதால் எல்லா பகுதிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று பிரதமர் மோடி நினைப்பதால் தமிழகத்திற்கு அரிய வாய்ப்புகள் கிடைக்க தொடங்கி உள்ளது.
உடல் நலம் சரியில்லாததால் குடியரசு துணை தலைவர் ராஜினாமா செய்தார்.

தமிழகம் மட்டுமல்ல புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தமிழரான வேட்பாளரை ஆதரிப்பது தான் நியாயமாக இருக்க முடியும். திமுக தலைவர் முதலமைச்சர் தமிழ் தமிழர்கள் என்று பேசுகின்ற நேரத்தில் ஒரு தமிழருக்கு ஆதர்வு அளிக்க வேண்டும். மராட்டியத்தில் இருந்து ஒருவர. குடியரசு தலைவர் பதவிக்கு நிற்கும் போது கட்சியை தாண்டி ஆதரித்தனர். அதே மாதிரி தமிழருக்கு திமுக ஆதரவு கொடுக்கும் என்று நம்புகிறோம். எதிர்பார்க்கிறோம்.
திருச்சி சிவா அறிவித்த பின் பார்க்கலாம். எப்படி இருந்தாலும் ஜெயிக்க போவது நாங்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.