• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாங்கள் பெறுப்பு ஏற்க மாட்டோம்.. தனியார் பள்ளிகளின் புது டெக்னிக்..

Byகாயத்ரி

Jul 26, 2022

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலைக்கு முற்பட்டு வருவதால் தனியார் பள்ளிகள் “பொறுப்பு துறப்பு” படிவத்தில் பெற்றோர்களிடம் கையெழுத்து கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி, விடுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்த போராட்டம் மற்றும் கலவரங்கள் வெடித்து பள்ளி சூறையாடப்பட்டது. இதையடுத்து பல தனியார் பள்ளிகள் “தங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல” என்ற சான்றில் பெற்றோரிடம் கையெழுத்து பெறுவதாக புகார் எழுந்துள்ளது. சில தனியார் பள்ளிகள் அந்த சான்றில் கையெழுத்திடாவிட்டால் மாணவர்களின் டி.சியை பெற்று செல்லுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது. இந்த தொடர் தற்கொலைகளால் பள்ளி நிர்வாகங்களும் அதிர்ந்துபோயுள்ளது.