• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

நாங்கள் டெல்லிக்கு அடிமை கிடையாது, கே டி ஆர் பேச்சு…

ByK Kaliraj

Mar 6, 2026

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

அதிமுக ஆட்சி அமைத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது உறுதி

திமுக ஆட்சியால் மக்கள் படும் கஷ்டங்களை சொல்ல முடியாத அளவில் உள்ளது

அதிமுக 210 தொகுதிகளில் வெற்றி பெற போகிறது

திமுக காங்கிரஸ் கட்சிகளின் சாதகத்தில் பேருக்கும் ஏழரை சென்று கொண்டிருகிறது

திமுக போட்டியிடும் இடங்களில் காங்கிரஸ் காலைவாறும், காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் திமுக காலைவாறும்

திமுக காங்கிரஸ் இடையே ஏழாம் பொருத்தமாக உள்ளது

திமுக காங்கிரஸ் இடையே இணக்கமான உறவு இல்லை

மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் தருவதாக மக்களை கேவலப்படுத்திய திமுகவிற்கு தோல்வி என்ற பரிசை தர மக்கள் தயராகி விட்டனர்

வரி விதித்து ஏழை மக்களை மீண்டும் ஏழையாக்கியதுதான் திமுகவின் வரலாறு

சொன்ன வாக்குறுதியை நிறைவவேற்றியவர் ஜெயலலிதா

திமுக ஆட்சியை நடுநடுங்க வைத்தவர் ஜெயலலிதா

எடப்பாடி பழனிச்சாமி முதல்வரை வழிமறித்து கேள்வி எழுப்பியதால் மகளிர் உரிமை தொகையை வளங்கினார்கள்

திமுக சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, ஆனால்
சொல்லாததை செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி

கல்வியில் எழுச்சியும், பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியும் ஏற்படுத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் திமுகவி ஆட்சியின் வேலை

மக்களுக்காக எதையுமே செய்யாமல் மக்களிடம் வாக்கு கேட்க திமுகவினருக்கு வெக்கமாக இல்லையா என கேள்வி

சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி வாங்கியது நான்தான்,

அதிமுக ஆட்சியில் மேம்பால பணிகளை துவங்க வேண்டிய நேரத்தில் நயவஞ்சகத்தனமாக வழக்கு போட்டு வேலையை நடக்க விடாமல் தடுத்தது திமுகவினர்

காங்கிரஸ், திமுக சிவகாசி தொகுதிக்காக எதையுமே செய்யவில்லை

திமுக ஆட்சியில் 5 ஆண்டு காலத்தில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என சொல்ல முடியுமா

மக்களின் வரிப்பணம் அனைத்தும் தற்போது கருணாநிதி வீட்டின் சொத்தாகிவிட்டது

திமுக ஆட்சியில் காவேரி, வைகை போன்ற ஆறுகளை தூர்வாறுவதாக பணத்தை ஆற்றில் விட்டுவிட்டார்கள்

முதல்வர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக செயல்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் தாமிரபரணி, காவேரி ஆறுகளிருந்து வாய்க்கால் அமைத்து பல மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்திருப்போம்

விளம்பரத்தால் ஆட்சியை நிலைநிறுத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திமுகவை மு.க.ஸ்டாலின் கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றிவிட்டார்

திமுக பணத்தை கொடுத்து வெற்றி பெறலாம் என்ற கணக்கு அடித்து நொறுகிக்கப்படும்

திமுக தங்களது கூட்டணியில் 50 கட்சிகளை இணைத்தாலும் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் நிலையை தமிழக மக்கள் உருவாக்குவார்கள்

எங்களை எதிர்க்கும் துணிச்சல் திமுக கூட்டணிக்கு கிடையாது

நாங்கள் டெல்லிக்கு அடிமை கிடையாது, எங்களை அடிமைப்படுத்தும் சக்தி யாருக்கும் கிடையாது,

அதிமுக யாரையும் அடிமைப்படுத்தவும் செய்யாது, யாருக்கும் அடிமையாகவும் இருக்காது

அதிமுக தொண்டர்கள் எவனுக்கும் பயப்பட மாட்டோம், எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் வல்லமை கொண்டவர்கள் அதிமுக தொண்டர்கள்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி

மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால்தான் மத்திய அரசிடமிருந்து நிதியை பெற முடியும்

எடப்பாடி நிதி கேட்டால் டெல்லி உடனே கொடுக்கும்

திமுக ஆட்சியில் கொரோனோ போன்ற சூழல் வந்திருந்தால் மக்கள் செத்து மடிந்திருப்பார்கள்

எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்து வந்தார் என சொல்கிறார்கள், நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்

அதிமுக கட்சி இன்று இருப்பதற்கு காரணமே எடப்பாடி பழனிச்சாமிதான்

அதிமுகின் வாரிசு என சொன்னவர்கள் இன்று திமுகவிற்கு சென்றுவிட்டார்கள்

நான் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொறுப்போடு நடந்து கொள்கிறேன்

பணக்காரர்களின் கனவை நினைவாக்க துடிக்கும் திமுகவுக்கு ஏழை மக்களின் கஷ்டம் தெரியாது

பட்டாசு, காலண்டர் தொழிற்சாலைகளில் பணியாற்றியவன் நான், எனக்குத்தான் சிவகாசி மக்களின் கஷ்டம் தெரியும்

சிவகாசியில் திமுகவுக்கு வேலையே கிடையாது

அதிமுக ஆட்சி அமைந்த அன்றைய தினம் இரவே சஸ்பெண்ட் செய்யப்பட்டு மூடப்பட்டுள்ள அனைத்தும் பட்டாசு ஆலைகள் திறக்கப்படும்,

அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள புதிய பட்டாசு கடைகளுக்கு உடனே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.