• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் சென்னை காவல்துறையினரால் கைது..,

ByKalamegam Viswanathan

Jul 12, 2026

பிக் பாஸ் புகழ் வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் இயங்கி வரும் provoke என்ற யூடியூப் சேனலுக்கு நேர்காணலுக்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் அவரை அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு சென்னை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார்.

மேலும் கேமரா, லைட், உள்ளிட்ட பொருட்களை திவாகர் சேதப்படுத்தியதாக யூடியூப் சேனல் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் திவாகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மற்றும் எதிர்தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்குபதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலும், சென்னை நாசரேத் பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்திருந்த மற்றொரு வழக்கின் அடிப்படையிலும் மதுரை புதூரில் வீட்டில் இருந்த திவாகரை சென்னை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.