• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து… வாலிபர் உயிரிழப்பு…

BySeenu

Jun 23, 2025

தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்தில் கார் ஷோரூம்பில் பணியாற்றிய வாலிபர் உயிரிழந்தார்.விபத்து ஏற்பட்ட இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவை, அவிநாசி சாலையில் ஹோப்ஸ் சிக்னல் அருகே உள்ள ஜி.ஆர்.டி கல்லூரி அருகே உள்ள சி.ஏ.ஐ கார் ஷோரூம் முன்பு அங்கு பணியாற்றி வந்த பிரசாந்த் என்ற வாலிபர் நின்று கொண்டு இருந்தார். அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அப்பொழுது அந்த ஷோரூம் முன்பு நின்று இருந்த ஷோரூம் ஊழியர் பிரசாந்த் மீது கவிழ்ந்ததில் அதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் தெரிய வந்து உள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்தில் வாகனங்கள் சிக்கிக் கொண்டதால் அந்தப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்தவுடன் போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேம்பாலப் பணிகளின் பயன்படுத்தி வந்த கிரேன் மூலம் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து மத்திய போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.