திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர். திண்டுக்கல்லில் சில பகுதிகளுக்கு 7நாட்கள் குடிநீர் நிறுத்தம். திண்டுக்கல், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மறு சீரமைப்பு பணிகள் குஜிலியம்பாறை, எரியோடு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் 28-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை நடக்க உள்ளது.

இதனால் திண்டுக்கல் அண்ணா நகர் ரவுண்ட் ரோடு, ஆர்.எம்.,காலனி (புதியது), எம்.வி.எம்., நகர் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தொட்டிகளுக்கு குடிநீர் உந்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதனால் மாநகராட்சி வார்டு 3,5,6,14,15, 16,17,18,19,20,32 பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் தெரிவித்துள்ளார்.













; ?>)
; ?>)
; ?>)