மேட்டூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு இன்று காலை நிலவரப்படி 22,358 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அதில் 21,538 கன அடி நீர் காவிரி ஆற்றிலும், 500 கன அடி தென்கரை வாய்க்காலிலும், 300 கன அடி தண்ணீர் கட்டளை மேட்டு வாய்களிலும், 20 கன அடி தண்ணீர் கிருஷ்ணராயபுரம் வாய்க்காலிலும் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.
மேலும் மாயனூர் காவிரி ஆற்றில் நேற்று 19,829 கன அடி உபரி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 22,358 கன அடி உபரி நீர் வருகை.
இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.