மதுரை மவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியில் கீழத்தெரு புதுத்தெரு நடுத்தெரு பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் செல்லும் கிருதுமால் நதியை கடப்பதற்காக 20 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலம் அமைப்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால் சாக்கடை நீரானது வெளியேறி அப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் புகுந்தது.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் முற்றிலுமாக கழிவுநீர் சூழ்ந்துள்ளது. 40 வருடங்களாக இயங்கி வரும் இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று கிருதுமால் நதி கழிவு நீரானது பள்ளிக்குள் சென்ற நிலையில் அது குறித்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கும் தற்போது வரை மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பள்ளி வளாகம் முழுவதும் சாக்கடை நீர் சூழ்ந்ததால் இன்று திங்கட்கிழமை என்பதால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு ல் செல்ல முடியவில்லை.
இதனால் பள்ளி மாணவர்களை சாலை அருகே உள்ள இருந்த கோயில் முன்பாக அமர வைக்கப்பட்டனர்.
மாற்றியிடம் கூட இல்லாமல் பள்ளி மாணவர்களை சாலையில் அமர வைத்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் , சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் அங்கு இருந்த சமுதாயக் கூட்டத்தை தூய்மைப்படுத்தி பின்பு தற்போது மாணவர்களை அங்கு வைத்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு தற்போது வந்த மாநகராட்சி அதிகாரிகள் பள்ளியில் சூழ்ந்துள்ள சாக்கடை நீரை விரைந்து வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கால்வாய் சாக்கடை நீரால் அவதிக்குள்ளான மாணவர்களை அமர வைப்பதற்கு மாற்றியிடம் கூட இல்லாமல் சாலையில் அமர வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.