• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை

கேரளம் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் நாளை (05.05.2024) கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்றும் வீசுவதோடு கடல் கொந்தளிப்பும் ஏற்படகூடும் என்றும், கடலில் 45 முதல் 65 கி.மீ. வேகத்துடன் கூடிய காற்று வீசக்கூடும் என்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், 1.5 மீட்டருக்கு கடல் அலை எழும்ப கூடும் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம் என்றும், கரையோரத்தில திடீரென அதிக அலைகள் ஏற்படும் என்பதால் கடலில் குளிக்க வேண்டாம் என்றும், தாழ்வான கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், கடல் கொந்தளிப்பால் படகுகள் ஒன்றோடன்று மோதி சேதமடைவதை தடுக்கும் கையில் போதிய இடைவெளியிட்டு பாதுகாப்பான பகுதிகளில் நிறுத்துமாறும் கன்னியாகுமரி மீனவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படுகிறது.