சென்னை ஆலந்தூரில் உள்ள வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வாஜித் தலைமையில் ஒரு குழுவாக வந்து புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருப்பத்தூர் பகுதிகளில் வக்பு போர்ட்டுக்கு சொந்தமான ரூ.200 கோடிக்கு மேல் உள்ள சொத்துகளை திருட்டுத்தனமாக பள்ளி வாசல்களை நிர்வாகிக்கும் முத்தவல்லிகள் விற்று உள்ளனர்.

இது தொடர்பாக ஏற்கனவே பல முறை புகார் கொடுத்தும் திருப்பத்தூர் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் ஐ.ஜி.யை சந்தித்து புகார் கொடுக்க வந்து உள்ளோம்.
மேலும் எப்.ஐ.ஆர் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து வக்பு சொத்துக்களை மீட்க வேண்டும் என கூறினார்..