• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேனியில் ‘தங்க பத்திரம்’ வேணுமா தபால் நிலையம் ‘போங்க’

இன்று (ஜன.10) முதல் வரும் 14ம் தேதி வரை, தபால் நிலையங்களில் ‘தங்க பத்திரம்’ விற்பனை செய்வதால், பொதுமக்கள் முதலீடு செய்து பயனடையலாம் என தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் கூறினார்.

அவர் மேலும் நமது நிருபரிடம் கூறியதாவது: ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடுகிறது. தேனி மாவட்டத்தில் அனைத்து தலைமை, துணை தபால் நிலையங்களில் இன்று (ஜன.10) முதல் வரும் 14ம் தேதி வரை 5 நாட்கள் மட்டும் தங்க பத்திரம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இத்திட்டத்தில் ஒருவர் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை பத்திரம் பெறலாம். ஒரு கிராம் ரூ. 4,786 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு தொகைக்கு ஏற்ப 2.5 சதவீதம் வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். திட்டம் முடிந்து, 8 ஆண்டுகளுக்கு பின் 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு தபால் நிலையங்களை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். உதவி கோட்ட சண்காணிப்பாளர் எம்.ஜனகராஜ் உடனிருந்தார்.