தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே உள்ள பூங்காவில் சோத்து சட்டியுடன் காத்திருப்பு போராட்டம் ஆனது நடைபெற்று வருகிறது.

இதில் 400க்கும் ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சோத்து சட்டியுடன் கலந்து கொண்டுள்ளனர்.

இதில்,
- ஊராட்சி செயலாளர் நிரந்தர பணி நியமனம் வழங்க வேண்டும்.
- கொரோனா கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும்
- கணினி இயக்குபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
- தற்காலிக பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
- கிராம ஊராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
- அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும்,
- அனைத்து பணியாளர்களுக்கும் இ எஸ் ஐ, பிஎஃப், எப் பி எஃப் வழங்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.