மதுரை வண்டியூரில், மாநகராட்சி அலுவலகத்தில், பாதாள சாக்கடை திட்டத்துக்கு பணம் கட்டுவதற்காக சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்,
பாதாள சாக்கடை திட்டத்துக்கு, பணம் கட்ட பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருந்தனர்.

மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர், உதவி ஆணையாளர் வருவாய்
பணம் கட்ட கால தாமதம் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கேட்டுக் கொண்டனர்.

பலர் மதிய உணவை தவிர்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வயதானோர் பலரும் அவதியடைந்தனராம். மதுரை மாநகராட்சி நிர்வாகம், இது போன்ற முகாம் நடத்தும் போது, வரும் பொதுமக்களுக்கு உரிய வழிகாட்ட அலுவலரை நியமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.




