அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஞாயிறு விடுமுறை மற்றும் மே மாதம் விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவல பாதையில் காவடிகள் எடுத்தும், ஆடி பாடியும், படிப்பாதை ,யானை பாதை , மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆண் ,பெண் என பிரிக்கபட்டு செல்போன் கொண்டு செல்லாதவாறு சோதனை செய்யபட்டு அனுப்பட்டு வருகின்றனர்.

மேலும் மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையங்களில் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றும் ,சாமி தரிசனம் செய்ய இரண்டு மணி நேரம் வரை காத்திருந்தும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.