• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசு வேலை வாங்கித் தருவதாக கூலித் தொழிலாளி பெண்ணிடம் ரூ 7 லட்சம் மோசடி…

ByKalamegam Viswanathan

Jul 31, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள ரத்தினக் குமார் என்பவர், தான் ஒரு துணை தாசில்தார் என கூறி ,பேரையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலையாரி வேலைக்காக அரசு நடத்திய நேர்முக காணலில் சென்று விட்டு வந்த கூலித் தொழிலாளி பிரகலதா (34) என்ற பெண்ணிடம் , துணை தாசில்தார் என அறிமுகப்படுத்திக் கொண்ட ரத்தினக்குமார் தலையாரி வேலையை தான் பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூபாய் 7 லட்சம் செலவாகும் எனவும் கூறி, அப்பெண்ணை ஏமாற்றி நான்கு தவணைகளாக பெண்ணிடம் இருந்து ரூ 7 லட்சத்தை பெற்று மோசடி செய்துள்ளார்.

இது குறித்து அந்த பெண் மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததால், திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ய வந்த போது, தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் அப்பெண்ணை வழி மறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.