• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விவேகானந்தர் மண்டபம் படகு போக்குவரத்து கட்டண உயர்வை – சிபிஎம் கட்சியினர் மனு

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு படகு போக்குவரத்து.கட்டண உயர்வை கண்டித்து.ஆட்சியரிடம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு.
சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரிக்கு தினம், தினம் ஆயிரக்கணக்கான பன் மொழி சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.குமரி வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும்.கடலில் படகில் பயணம் செய்து. கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு செல்வது வாடிக்கை.
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு பயண கட்டணத்தை சில நாட்களுக்கு முன் 50 சதவீதம் உயர்த்தி சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.சாதாரண பயண கட்டணம் ரூ.50.00என இருந்ததை ரூ.75.00எனவும், சிறப்பு கட்டணம் ரூ.200.00 என இருந்ததை ரூ.300.00என உயர்த்தியதை கண்டித்தும்,கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என.மார்க்சிஸ்ட் கட்சியின் அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளர் சிவதாணு தலைமையில்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அந்தோனி, ஐயப்பன், லெட்சுமி சகாய வெனீஸ், அலெக்ஸ் உட்பட, கட்சியின் பல்வேறு பொறுப்பாளர்.படகு கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.