• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விவேகானந்தா கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா..,

கன்னியாகுமரியை அடுத்துள்ள விவேகானந்தா கலைக் கல்லூரியின்
56_ பட்டமளிப்பு விழாவில். கல்லூரியின் செயலாளர் ராஜன் தலைமையில் கல்லூரி முதல்வர் டி.சி.மகேஷ் முன்னிலையில்.

சிறப்பு விருந்தினராக வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனரும் முன்னாள் நாடாளுமன்ற மேலவை மற்றும் தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான விஸ்வநாதன் பங்கேற்று.412 மாணவ_மாணவிகளுக்கு, இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை
வழங்கினார்.

விஸ்வநாதன் அவரது பேச்சில் உலகப் பந்தில் உள்ள பல்வேறு நாடுகளில் தமிழர்கள் கோல் ஓச்சும் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். இதற்கான காரணம் அவர்கள் கற்ற கல்வி. உலகில் உள்ள எந்த நாடானாலும் அவர்களின் உயர்வை காட்டுவது அவர்கள் கற்ற கல்வி மட்டுமே.

இந்தியாவின் உண்மையான வளர்ச்சி என்பது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் உள்ள ஒவ்வொரு மாநிலமும் கல்வியை ஊக்குவித்து அந்தந்த மாநிலத்தின் இளைய சமூகம் கல்வி கற்பிப்பதில் தான் ஒவ்வொரு மாநிலத்தின் உண்மையான வளர்ச்சி இருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்த அந்த நாளிலே நாட்டின் முதல் பிரதமர் வரவு,சிலவு திட்டத்தில் கல்விக்கு 6_ சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் என சொன்னார்.

நாடு சுதந்திரம் பெற்று 77_ஆண்டுகளை கடந்து நடைபோடும் இன்று கூட ஒன்றிய அரசு வரவு,சிலவு திட்டத்தில் ஒதுக்கும் நிதி 3_ சதவீதம் தான்.

மாநில பட்டியலில் இருந்த கல்வியை,அவசர காலம் அமலில் இருந்த அந்த நாளில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றி நாடாளுமன்றமன்றத்தில் பொது வாக்கெடுப்பு நடை பெற்றபோது நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த நானும், பிரதமர் இந்திரா காந்தியின் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தேன். அதற்கு காரணம் மாநிலத்தின் கல்வி தேவைக்கு மத்திய அரசு அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்யும் என்ற நம்பிக்கையில். விவேகானந்தா கல்லூரியில் இன்று பட்டம் பெற்றுள்ள இரு பாலர் மாணவ சமுகத்தை மன உவந்து வாழ்த்துகிறேன்.

அடுத்த ஆண்டு முதல். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில்
இளம் கலை மற்றும் முதுகலை பட்டத்தில் முதல் இடம் பெறும் இரு பால் மாணவர்களுக்கு தல ஒருவருக்கு “தங்கப் பரிசை, வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனத்தில் சார்பில் வழங்குவேன் என விஸ்வநாதன் சொல்லி முடிக்கும் முன், அரங்கில் கூடியிருந்த அத்தனை மாணவர்கள் மட்டுமே அல்ல மேடையில் இருந்த விவேகானந்தா கல்விக் கழக செயலாளர், கல்லூரி முதல்வர் துறை சார் தலைவர்கள் அனைவரும் கை ஒலி எழுப்பி அவர்களது நன்றியையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள்.