மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி தேக்கம்பட்டியில் உள்ள புகழ்பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தரிசனம் செய்தார்.

கோவிலில் வழிபாட்டை முடித்த பின்னர், அவர் மக்களை நேரில் சந்தித்து உரையாடினார். இதில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று தனது குறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினர்.
இவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, மற்றும் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் இணைந்திருந்தனர்.

தரிசனத்தை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தனது “எழுச்சி பயணம்” எனப்படும் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களது கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டறியும் நிகழ்வு ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அதிமுகவின் அடுத்த கட்ட அரசியல் முன்னேற்றத்திற்கான முக்கிய பயணமாக இந்த எழுச்சி பயணம் கருதப்படுகிறது.