• Sun. Feb 22nd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் வந்து சேர்ந்தால் வரவேற்பதில் விசிக மகிழ்ச்சி அடைகிறது. -தொல் திருமாவளவன் பேட்டி..,

ByKalamegam Viswanathan

Feb 21, 2026

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக ‘காந்தியை மறவோம்’ என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

அதிமுக பாஜகவின் பிடிக்குள் போய்விட்டது. மெல்ல மெல்ல அது காவிமயமாகிறது என்கிற கருத்தை ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். கவலையையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். அதற்கு சான்றாகத்தான் இந்த பதிவு அமைந்திருக்கிறது. பெரியார் பாசறையில் தோன்றிய இயக்கம் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தலைமையில் இயங்கிய ஒரு திராவிட இயக்கம். சங்பரிவார்களின் பிடியில் இருப்பது என்பது கவலை அளிக்கிறது. அதிமுக வெற்றி பெற்றால் ஆர் எஸ் எஸ் தான் நாட்டை ஆளும் அதில் யாருக்கும் ஐயம் தேவையில்லை என்பதை அவ்வப்போது நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

திருவள்ளுவருக்கு காவி பூசக்கூடிய வேலையை துணிச்சலாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்யக்கூடிய அளவிற்கு நிலைமை மாறி இருப்பது வேதனை அளிக்கிறது. தற்போது அதனை தற்போது அப்புறப்படுத்தி இருக்கிறார்கள் என்கிற செய்தி ஆறுதலளிக்கிறது. ஆனாலும் அதிமுக தலைவர்கள் கவனமாக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் இல்லையேல் அவர்கள் தமது சுய அடையாளத்தை இழக்க நேரும் என்பதை கூறிக்கொள்கிறேன்.

தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு:

உரிய நேரத்தில் தோழமைக் கட்சிகளை அழைத்துப் பேசுவார்கள் அப்போது விடுதலை சிறுத்தைகளிடமும் பேசுவார்கள் அப்போது அந்த குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தி எங்களுக்கான தொகுதிகளை கேட்டு பெறுவோம். சுமூகமான முறையில், நல்லிணக்கமான முறையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் என்று நான் நம்புகிறேன். திமுக கூட்டணி இப்போது மேலும் வலுவடைந்திருக்கிறது. தேமுதிக இந்த கூட்டணியில் இணைந்து இருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது. அதேபோல ஓபிஎஸ் தலைமையிலான அணியும் திமுக கூட்டணிக்கு வரும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. திமுக கூட்டணி நாளுக்கு நாள் ஒரு மெகா கூட்டணியாக வலுப்பெற்று வருகிறது. அந்த வலிமை குன்றாமல் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அத்தகையை நடத்திங்கீட்டை நிறைவு செய்வோம் என்று நம்புகிறேன்.

திமுக அதிமுக கருத்துப்போர் குறித்த கேள்விக்கு:

கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு நடக்கும்போது இது போன்ற சலசலப்புகள் எழுவது இயல்பானது தான். இதனால் கூட்டணி உடைந்து சிதறிப்போகும் என்று கருத தேவையில்லை. 100 விழுக்காடு எனக்கு நம்பிக்கை இருக்கிறது. காங்கிரஸ் திமுக தலைமையிலான கூட்டணி தொடரும் இந்த கூட்டணியின் வெற்றிக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து நயினார் நாகேந்திரன் கூறியது குறித்த கேள்விக்கு:

இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறபோது புதிய அறிவிப்புகள் புதிய திட்டங்கள் போன்றவற்றை எப்போதும் அறிவிப்பதில்லை இதுதான் நடைமுறை என்று சொல்லப்படுகிறது. பாஜக தலைவருக்கு தெரிந்திருக்கும் ஆனால் திமுக மீது குற்றம் சுமத்த வேண்டும் என்கிற அணுகுமுறையை கைவிடாமல் விமர்சனத்தை முன் வைத்திருப்பதாக கருதுகிறேன்.

கடந்த ஐந்தாண்டுகளை எண்ணற்ற பல புதிய திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியிருக்கிறது. பலதரப்பட்ட மக்கள் ஆசிரியர்கள், விவசாயிகள், மீனவர்கள் அனைத்து தரப்பும் உழைக்கும் மக்கள் என்றால் எல்லோரும் இந்த அரசின் ஐந்தாண்டு காலத் திட்டம் நடைமுறைகளை வரவேற்று பாராட்டுகிறார்கள்.

ஓபிஎஸ் வந்து சேர்ந்தால் மிக்க மகிழ்ச்சி. வரவேற்பதில் விசிக பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகத்தில் ஹிந்தி மொழி குறித்து ஆளுநர் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:

அரசியல் காரணத்திற்காக தான் ஹிந்தியை நம் மீது திணிக்கிறார்கள். மற்றபடி தனிப்பட்ட முறையில் மாணவர்கள் இந்தி கற்பதை யாரும் தடுக்கவில்லை. கேந்திர வித்யாலயா பள்ளியில் கற்றுக் கொடுக்கிறார்கள் அதை யாரும் தடுக்கவில்லை, சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் இந்தி கற்பிக்கப்படுகிறது யாரும் அதை எதிர்க்கவில்லை. இந்தியை விரும்பி படிக்கிற யாருக்கும் எதிராக இங்குள்ள அரசியல் கட்சிகள் செயல்படவில்லை.

அரசியல் கொள்கையாகவே இந்திய ஒன்றிய ஆட்சி மலர்களின் கொள்கையாகவே செயல் திட்டமாகவே பிற மாநிலங்கள் மீது திணிப்பது தான் அரசியல் நோக்கம். அந்த அரசியல் நோக்கத்தை எதிர்க்கிறோம். இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கிற முயற்சியை நாம் எதிர்க்கிறோம். இந்த நுட்பமான வேறுபாட்டை வேண்டுமென்றே மறைத்து திரிபு வாதம் செய்கிற போக்கை ஆர்எஸ்எஸ் உட்பட சங்பரிவார் அமைப்புகளை சார்ந்தவர்கள் செய்து வருகிறார்கள்.

ஆளுநரும் அத்தகைய பரிவார் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார் எனவே அவருடைய கருத்து தான் அரசியல் நோக்கம் கொண்டது.

அதிகார பகிர்வு குறித்த கேள்விக்கு:

அதிகார பகிர்வு என்பதுதான் கட்சி வளர்ச்சிக்கு பயன்படும் என்று இல்லை அதிகார பகிரவும் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதன் மூலம் தான் கட்சி வளர்ச்சி அடையும் அதனால்தான் அதை நாங்கள் உயர்த்தி பிடிக்கிறோம் என்பது இன்றைய அரசியல் சூழலுக்கு உகந்ததாக இல்லை. இப்போதைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் நின்று முறியடிக்க வேண்டும் என்பதுதான் முதன்மையானது. நாம் வெற்றி பெற்ற பிறகு நமக்குள் அதிகார பகிர்வை கூறலாம். அப்போது வாதிடலாம் ஆனால் வெற்றிக்கு குந்தகை விளைவிக்கும் எந்தவித முயற்சியும் நாம் செய்யக்கூடாது என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.

நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னதுரை அவர்கள் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுகிறேன் என கூறினார்.