விஷால் நடிப்பில் கடைசியாக ‘வீரமே வாகை சூடும்’. தற்போது, விஷாலின் “லத்தி” படத்திற்காக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹீன் உடன் ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கும்போது பலத்த காயமடைந்தார். வினோத்குமார் இயக்கிய இத்திரைப்படத்தை நந்தா மற்றும் ரமணா இணைந்து தயாரிக்கப்படும் இந்த படத்திற்கு சாம் இசையமைக்கிறார், எம் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக விஷால் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினாக சுனைனா நடிக்கிறார்.நீண்ட கால இடைவேளைக்கு பிறகு விஷாலுடன் சுனைனா இணைந்துள்ளார். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், தீடிரென விஷாலுக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காயமடைந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டதோடு ஸ்டண்ட் காட்சியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில் அதிரடியுடன் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில், லத்தி பட ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பின் போது எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. தற்போது, கேரளாவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மார்ச் முதல் வாரத்தில் படக்குழுவினருடன் இணைந்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்கவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

