



மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூரில் அரசு காச நோய் மருத்துவமனை பிரிவு உள்ளது. இங்கு ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவருக்கான சிறப்பு சிகிச்சை மையம் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டு தெருவோரங்களில் அனாதையாக திரிபவர்களை செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் தோப்பூர் அரசு மருத்துவமனை ஆதரவற்றோர் மனநல மருத்துவசிகிச்சை மையம் இணைந்து இங்கு அவர்களுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிகிச்சை பெற்று வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிவித்து பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட போது வைரலாக வீடியோ தற்போது பரவி வருகிறது.


மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவில் தீபாவளி பண்டிகை பட்டாசு வெடித்து கொண்டாடும் காட்சிகள் பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பை பெற்றுள்ளது.


