• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தெலுங்கில் தயாராகும் விநோதய சித்தம்

சமுத்திரகனி இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான படம் விநோதய சித்தம். தம்பிராமையா, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படம், கடந்த அக்டோபர் 13ஆம் தேதி ஜீ5 ஒரிஜினல் ஓடிடி தளத்தில் வெளியானது. சத்யா இசையமைத்திருந்த இப்படத்துக்கு, ஒளிப்பதிவு ஏகாம்பரம் மேற்கொண்டிருந்தார்.

படத்தின் கதை நாயகனாக தம்பிராமையா நடித்திருந்தார். விமர்சனரீதியாகவும் வரவேற்பை பெற்ற இந்த படம் ஓடிடியில் பார்வையாளர்களின் விருப்பப்படமாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கில் இப்படத்தை தயாரிப்பதற்கான பணிகள் துவங்கியிருக்கிறது.

தெலுங்கு திரைப்பட ரசிகர்களிடம் நடிகராக பிரபலமாகிவிட்டசமுத்திரகனி விநோதய சித்தம் படத்தின் தெலுங்கு பதிப்பையும் அவரே இயக்குகிறார்.
அதோடு, படத்தில் சமுத்திரகனி ரோலில் பவன்கல்யாண் நடிக்க இருக்கிறாராம். அதோடு, தம்பிராமையா ரோலில் நடிக்க மோகன்லாலை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்