நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது
அதன் ஒரு பகுதியாக பாரத் சேனா மாநிலத் தலைவர் செந்தில் கண்ணன் தலைமையில் கோவை மாநகர மாவட்டம் பாரத் சேனா சார்பாக சிவானந்தா காலனி பகுதியில் குபேர லட்சுமி விநாயகர் சிலை அமைத்து விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடினார்கள்.கோவை மாநகர மாவட்டம் பாரத் சேனா மாவட்ட அமைப்பாளர் குமரேசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்தி, மாவட்டச் செயலாளர் பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவையில் பாரத் சேனா சார்பாக, விநாயகர் சதுர்த்தி விழா..!








