• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

நாகை அருகே குளம் ஏலம் விடுவதற்கு வந்த இந்து சமய அறநிலைத் துறையினரை கேள்வியால் துளைத்து எடுத்த கிராம மக்கள்..

ByR. Vijay

Mar 21, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த பொரவச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராமபத்திர பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது இவ்வாலயத்தில் கோவிலுக்கு சொந்தமான ஆறு குளங்கள் உள்ளது.

இன்று குளம் ஏலம் விடுவதற்காக செயல் அலுவலர் கணேசமூர்த்தி தலைமையிலான இந்து சமய அறநிலைத்துறையினர் ஆலயத்திற்கு வருகை தந்தனர். ஆனால் கிராம மக்களுக்கு ஏலம் குறித்த எந்தவித அறிவிப்பும் அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இருந்தபோதிலும் கிராம மக்களுக்கு ஏலம் விடுவது தெரிந்து அங்கு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகளிடம், 6 குளத்தின் அளவு என்ன கோவிலின் சொத்து மதிப்பு என்ன,கோயில் வருமானம் என்ன, கும்பாபிஷேகம் நடந்து 14 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை கும்பாபிஷேகம் நடத்தாதது ஏன் கோவில் அர்ச்சகருக்கு சம்பளம் 1500 மட்டுமே வழங்கப்படுகிறது. அடிப்படை சம்பளம் கூட வழங்கப்படவில்லை என பல்வேறு கேள்விகளால் பதில் கூற முடியாமல் ஏலத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதிகாரிகள் சென்றனர் இதனால் பரபரப்பு நிலவியது.