• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கோனூரில் வட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கோனூரில் கோயில் நிலத்தை மீட்க வலியுறுத்தி வட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த கோனூர் கிராமத்தில், முத்தாலம்மன் கோயில் அருகே புறம்போக்கு நிலத்தில் வணிக நிறுவனங்கள் உள்ளன. கோயில் பெயரில் 50 ஆண்டுகளாக இவற்றிற்கான வரி செலுத்தப்பட்டு வருகிறது. நிலத்தை கைப்பற்ற தனியார் சிலர் கோர்ட் மூலம் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க துரிதப்படுத்தி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஊர் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு ஒன்று கூடினர். இதனை அடுத்து திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ரமேஷ் பாபு அவர்கள் நேரில் வந்து பொதுமக்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றுவது பற்றி விசாரணை செய்து முடிவு செய்யப்படும் என புறப்பட்டார். கொந்தளிப்படைந்த கிராம மக்கள் வட்டாட்சியரை வாகனத்தில் ஏறவிடாமலும் வட்டாட்சியர் வாகனம் செல்ல விடாமலும் தடுத்து நிறுத்தி வாகனத்தின் முன் அமர்ந்து முற்றுகையிட்டனர்.