• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விக்ரமிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி சிறப்பு கவுரவம்

ByA.Tamilselvan

Nov 9, 2022

தமிழ் சினிமாவின் தனித்துவமிக்க நடிகராக விளங்கும் விக்ரமிற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அமீரகம் சிறப்பு கவுரவம் செய்துள்ளது.
திரைத்துறையைச் சேர்ந்த பலர் கோல்டன் விசா பெற்று வருகின்றனர். ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார், கமல்ஹாசன், பாவனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.
இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விக்ரமிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதனை நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவர் ஷானித் ஆசிப் அலி வழங்கியுள்ளனர். இந்த புகைப்படத்தை பூர்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.