• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நட்சத்திரப் பட்டாளத்துடன் “விக்ரம்“ படம் ரெடி .. இப்போ இவரும் இணைந்துவிட்டார்…

Byகாயத்ரி

May 12, 2022

கமல் நடித்து வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. மூன்று நாட்களுக்கு மூன்று கோடி ரூபாய் செலவாம்..

விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து தற்போது கமல் நடித்து வரும் படம் தான் விக்ரம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக விக்ரம் படம் உருவாகி வருகிறது. கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார். அதோடு முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் நரேன் காளிதாஸ், ஜெயராம், பிக்பாஸ் ஷிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி, மற்றும் மைனா நந்தினி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து புரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது ஆனால் உண்மையில் இன்றுடன் தான் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு( பேச் வொர்க் ) முடிவடைய உள்ளதாகவும் கிட்டத்தட்ட மூன்று கோடி செலவில் உருவாக்கவுள்ளதாவும் கூறப்படுகிறது. வரும் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 15-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ரிலீசுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் இந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் உள்ளன.

ஏகப்பட்ட ட்விஸ்ட் களைக் கொண்ட விக்ரம் படத்தின் முக்கிய அப்டேட் ஆக ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் கமலின் மகனாக சூர்யா நடித்துள்ளாராம். அதுவும் கிளைமாக்ஸில் பாகுபலி ஸ்டைலில் சூர்யா வருவார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் விக்ரம் படத்தை வேறலெவலில் பிரமோட் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் கோவையில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் ட்ரெயினில் விக்ரம் பட போஸ்டர்களை வரைந்து விளம்பரம் செய்திருந்தது. இதற்கிடையே அனிருத் இசையில் விக்ரம் படத்தின் முதல் பாடல் ‘பத்தல பத்தல’ பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முன்னதாக கமல் குத்தாட்டம் போடும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த பாடல் படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதோடு முக்கிய தகவலாக கமலின் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த விக்ரம் படத்தின் சில காட்சிகளும் இந்த புதிய விக்ரம் படத்தில் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகள் கழித்து வந்தாலும் கமலின் விக்ரம் சரியான ட்ரீட்டாக இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.