தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வெளியான படம் விக்ரம். மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் பிரம்மாண்டமாக இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி. பகத் பாசில் நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
அதிகமாக கிளாசிக் படங்களில் நடித்து வரும் கமல்ஹாசன், விக்ரம் படத்தின் மூலம் தனது பாக்ஸ் ஆபிஸ் பலத்தை நிரூபித்துள்ளார். கடந்த ஜூன் 3-ந் தேதி வெளியான விக்ரம் படம் 12 நாட்களின் முடிவில், கமல்ஹாசனின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற இமேஜை மீண்டும் நிரூபித்துள்ளது.. இரண்டு வாரங்கள் கடந்தாலும் விக்ரம் படம் இப்போதும் பல்வேறு பகுதிகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. விக்ரம் படம் 12வது நாளில் ரூ.15 கோடிக்கு மேல் சேர்த்து படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரூ.335 கோடியை நெருங்கியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் 3 படங்களை விடவும் விரைவில் 350 கோடியை கடந்துள்ள விக்ரம் படம் மேலும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கமல்ஹாசனின் சிறந்த படங்களில் ஒன்றாக மாறியுள்ள விக்ரம் படம், இங்கிலாந்தில் ’எந்திரன்’ படத்தின் 11 ஆண்டுகால வசூல் சாதனையை முறியடித்துள்ளது. அதுவும் 12 நாட்களில் இந்த சாதனையை செய்து இங்கிலாந்தில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற பெருமையை ‘விக்ரம்’ பெற்றுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கு மாநிலங்களில் இப்படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதால், படத்தின் இந்திய வசூல் அதிகரித்து வருகிறது.
ஆக்ஷன் த்ரில்லர் கதையம்சம் கொண்ட ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தரின் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்டத்தில் சூர்யாவின் என்ட்ரி அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது