• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

விஜய்வசந்த் எம்.பி.நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி பொருளாளராக நியமனம்… குமரி காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு…

கன்னியாகுமரியை அடுத்துள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ண பெருமாள். சுதந்திர போராட்டகாலத்திலும், அதற்கு பின்னும் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை வில்லுப்பாட்டு மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். தரியில் துணி நெய்வது இவரது பணியாக இருந்தது. இன்று அவரது வீட்டின் அடையாள பெயர் “தரிப்பெறை”.

ஹரிகிருஷ்ண பெருமாளின் மகன்களான இலக்கிய செல்வர் குமரி அனந்தன், வசந்தகுமார் குமரி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்,அந்த வரிசையில் அவரின் பேரன் விஜய் வசந்த் குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல், கடந்த பொது தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மக்கள் ஆதரவு பெற்று மக்களவை உறுப்பினராக இருப்பது ஒரு தனி சிறப்பு என்பதுடன் குமரி அனந்தன் அவரது குடும்பத்தார் ஏற்றுக்கொள்ளாத பாஜகவில் குமரி அனந்தனின் மகள் இணைந்து அந்த கட்சியின் உச்சபட்ச பதவியான தமிழக பாஜகவின் தலைவராக இரண்டு முறை பதவி வகித்தார். இவரும் தந்தை குமரி அனந்தன் போல் நாடாளுமன்ற உறுப்பினராகும் ஆசையில் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு முறை போட்டி இட்டு தோல்வி அடைந்தாலும், பிரதமர் மோடியின் ஆதரவில் தெலுங்கானா, புதுவை மாநிலங்களின் ஆளுநராக இருந்துள்ளார்.

குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்திற்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற பொருளாளராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர், மக்கள் பணியாளர் சந்தையடி பாலகிருஷ்ணன் இடம் கேட்டபேது பெரியவர் ஹரிகிருஷ்ணன் பெருமாள் நாடார் தேசப்பற்று மிக்கவர் பெரும் தலைவர் காமராஜரிடம் பெரும் பக்தி கொண்டவர் . குமரி மாவட்டத்தில் அவரது காங்கிரஸ் பிரச்சாரம் வில்லிசை நடக்காத இடமே கிடையாது. நான் பஞ்சாயத்து தலைவராக இருந்த போது அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத்து பகுதியில், நமக்கு நாமே திட்டத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு வசந்த குமாரிடம் நன்கொடை கேட்டபோது, மனம் உவந்து ரூ.2 லட்சம் தந்தார் அத்துடன் அரசின் நிதியும் பெற்று வசந்த குமரியின் பெற்றோர்கள் பெயரில் தான் அந்த மேல் நிலை நீர் தொட்டி கட்டியதையும். இன்றும் நிலைத்து இருக்கிறது. சொந்த ஊரின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட குடும்பம் மறைந்த ஹரிகிருஷ்ணன் பெருமாள் நாடார் குடும்பம். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் குமரியின் மக்களவை உறுப்பினர்கள் பதவி பெற்றது பொது நலத்தில் அந்த குடும்பத்தாரின் தொலை நோக்கு பார்வையை என்றென்றும் வாழ்த்தலாம் என்று தெரிவித்தவர். காங்கிரஸ் கட்சியின் தலைமை குமரி மக்களவை உறுப்பினர் தம்பி விஜய் வசந்திற்கு நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக நியமினம் செய்துள்ளது அந்த குடும்பம் பெற்றிருக்கும் உயர் பாராட்டு எனவும் தெரிவித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபலின் அறிவிப்பில்‌, விஜய் வசந்த் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளர்,செயலாளர்களாக ரஞ்சித் சன்(ராஜ்யசபா) எம்.கே.ராகவன்(லோக்சபா) டாக்டர்.அமர்சிங் (லோக்சபா) என்ற இந்த அறிவிப்பு உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.