கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் அதிமுக கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுதந்திரப் போராட்டத் தியாகியும் ராணுவ வீரருமான இம்மானுவேல் சேகரன் அவர்களின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சி அதிமுக கட்சி நிர்வாகிகள், புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.