உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி அன்று உண்ணா நோம்பில் இறைமகன் இயேசு மன்னன் பிலாத்தின் முன் குற்றம் சாட்டி நிறுத்தப்பட்டபோது. மன்னன் பிலாத் இவர் மீது நான் எந்த குற்றத்தையும் காணவில்லை என அங்கிருந்த தண்ணீரால் கையை கழுவிட்டார்.
இயேசுவின் மீது வீழ் பழி சுமத்தி சிலுவையில் அறைய வேண்டும் என கூடிய கூட்டம் ஒலி எழுப்பிய நிலையில்.
இயேசுவை சிலுவையில் அறைய கல்வாரி வரையிலான தூரத்திற்கு. இயேசுவை அறையும் சிலுவையை இயேசுவே சுமந்து சென்று சிலுவையில் அறைய பட்ட நாளை. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் “புனித வெள்ளி”என பின்பற்றுவதுடன்.

கத்தோலிக்க கிறித்தவர்கள் 18_வயது முதல் 60_ வயதுவரை உள்ள ஆண்கள்,பெண்கள் ஒருவேளை மட்டுமே கஞ்சியை மட்டுமே உண்டு விட்டு இரண்டு நேரம் உண்ணாநோம்பை உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறித்தவ சமூகத்தினர் கடைபிடித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் கத்தோலிக்க கிறித்தவ மக்களின் கோட்டார் மறைமாவட்டத்தின் தலைமை ஆலையமான கோட்டாறு புனித சவேரியார் தேவாலயம் முற்றத்தில். புனித வெள்ளியையொட்டி. கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் தவக்கால கஞ்சி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று,தவகாலத்தை பின்பற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு கஞ்சி வழங்கினார். தவகாலத்தில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவ மக்களுடன் சேர்ந்து விஜய் வசந்தும், உடன் இருந்த காங்கிரஸ் கட்சியினரும் கஞ்சி அருந்தினார்கள்.
இந்த நிகழ்வில் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார்,மீனவரணி மாநில தலைவர் ஜோர்தான், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டாக்டர்.சிவகுமார் மற்றும் பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
