• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விஜய் வசந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்..,

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு தலைவருமான விஜய்வசந்த் அவர்களின் 42 வது பிறந்த நாள் விழா சென்னை சவுத் போக் சாலையில் உள்ள வசந்த் ஸ்டுடியோவில் கொண்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

     தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர்  செல்வ பெருந்தகை  நேரில் வந்து விஜய்வசந்த் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

    அவரைத் தொடர்ந்து மாநிலத் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், தென்சென்னை மத்திய மாவட்ட தலைவர் முத்தழகன், மாநில பொதுச் செயலாளர்கள் காமராஜ், தளபதி பாஸ்கர், வர்த்தக காங்கிரஸ் மாநில துணைத் தலைவர்கள் கொண்டல்தாசன், மாம்பலம் ராஜேந்திரன், வர்த்தக காங்கிரஸ் மாநில பொது செயலாளர்கள் சக்தி கண்ணன், பெர்னட் ஜான்சன்,தணிகாசலம், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தாயுமானவன், நல்லமணி, ஹேம்னாத், தணிகைவேல் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

இதேபோல் வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனத்தின் அதிகாரிகள், விற்பனை பிரதிநிதிகள் பலர் தங்கள் நிறுவனங்களின் சார்பில் விஜய்வசந்த் அவர்களுக்கு கேக் வெட்டியும், மாலை அணிவித்தும் பூங்கொத்துக்கள் கொடுத்தும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டை ரயில்வே பார்டர் தெருவில் உள்ள வசந்த் அன் கோ தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழாவில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கேக் வெட்டி தனது சகோதரி தங்கமலர் ஜெகன்நாத் அவர்களுக்கு ஊட்டினார். முன்னாத கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களுக்கு தங்கமலர் ஜெகநாத் அவர்கள் பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வசந்த் அன் கோ நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.