குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழர்கள் பகுதியில் வாக்கு சேகரித்தார். மும்பை மாநகராட்சி 2026 பொதுத் தேர்தல் ஜனவரி 15, 2026 அன்று நடைபெறுகிறது,

இதில் முலுண்டு102 வது வார்டு, தாரவி ஹோலிவாடா ஆகிய தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வாக்கு சேகரிக்க கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்பி இன்று காலை(ஜனவரி 14) மும்பை வருகை தந்தார், மும்பை வருகை தந்த விஜய் வசந்த் எம்பி அவர்களை விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
முலுண்டு102 வது வார்டில் போட்டியிடும் ஹேமந்த் பாபட், அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இந்திரா நகர் வருகை தந்த விஜய் வசந்த் எம்பி அவர்களுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் ஹேமந்த் பாபட், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான இந்திரா நகர், விஜயநகர் ஆகிய இடங்களில் பொதுமக்களை வீடு வீடாக சென்றும், திறந்த வாகனத்தில் சென்று கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது வடகிழக்கு மும்பை காங்கிரஸ் மாவட்ட தலைவர் கேதன்ஷா, மாவட்ட துணைத்தலைவர்கள் கோபால்ராஜா, டேவிட், மற்றும் நிர்வாகிகள் கணேஷ், ஜாண் உட்பட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.




