• Fri. Jan 2nd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்வசந்த்..,

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார் விஜய்வசந்த் எம். பி

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய்வசந்த் அவர்கள், பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் 2- வது முறையாக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி கூறும் விதமாக இன்று  மாலை கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
  
அகஸ்தீஸ்வரம்  வடுகன்பற்று பகுதியில் இருந்து நன்றி அறிவிப்பு பிரச்சார பயணம் துவக்கியது. நன்றி அறிவிப்பு பயணம் செய்ய வருகை தந்த விஜய் வசந்த் எம் பி _யை காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  பின்னர் திறந்த வாகனத்தில் நன்றி அறிவிப்பு பிரச்சார பயணத்தை துவக்கினார். 

தொடர்ந்து தென்தாமரைகுளம் , சுவாமிதோப்பு, கரும்பாட்டூர் புத்தளம், தெங்கம்புதூர், மேலகிருஷ்ணபுதூர், பிள்ளையார்புரம் , பொட்டல், புதூர் வழியாக ஈத்தாமொழி சந்திப்பில் நன்றி அறிவிப்பு பயணத்தை நிறைவு செய்தார். இந்த நன்றி அறிவிப்பின் போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்று கொண்டார்.

நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ஆதிலிங்கபெருமாள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார தலைவர் டேனியல், ராஜாக்கமங்கலம் கிழக்கு வட்டார தலைவர் அசோக்ராஜ், முருகேசன், அகஸ்தீஸ்வரம் நகர தலைவர் விஜயகுமார், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டாக்டர் சிவக்குமார், கவுன்சிலர்கள் குறமகள், காங்கிரஸ் விளையாட்டு துறை கிழக்கு மாவட்ட தலைவர் அருண் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..