கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியாவின் நம்பர் 1 டீலர் வசந்த் & கோ சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் 2024-25 -ம் ஆண்டு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இன்று தக்கலை அடுத்த முளகுமூட்டில் குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து வசந்த் விருது 2024-25 வழங்கும் நிகழ்ச்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வருகை தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் நிர்மலா சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அருள் மேரி தங்கம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து
சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வசந்த அவார்ட் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய கல்லூரி செயலாளர் நிர்மலா சுந்தர்ராஜ் அவர்களுக்கும், கல்லூரி முதல்வர் அருள் மேரி தங்கம் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களுக்கு வசந்த் அவார்ட் ஏன் வழங்கிறோம் என்றால் மறைந்த எனது தந்தை வசந்தகுமார் அவர்கள் இந்த சமுதாயத்தில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழா, இந்த விருதினை பெற போகும் மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் முதல் மதிப்பெண் பெற்று இந்த இடத்தில் வந்திருக்கிறீர்கள் என்றால் சாதாரண விஷயம் அல்ல நீங்கள் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மறந்து விடக்கூடாது. மாணவர்களை ஆகிய நீங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள மனதை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகளில் தங்களை ஆர்வப் படுத்தி கொள்ள வேண்டும், அதற்காக பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்,

மாணவர்களிடம் என்ன திறமை உள்ளது என பெற்றோர்களும் தெரியும், நேரத்தை மொபைலில் வாட்ஸ் அப், பேஸ்புக் களில் அதிக நேரத்தை செலவிடாமல் தனது திறமைகளை வளர்த்து கொள்ள முயற்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும், மறைந்த எனது தந்தை வசந்தகுமார் அவர்கள் அகஸ்தீஸ்வரம் கிராமத்தில் பிறந்து சென்னையில் தொழில் தொடங்க வேண்டும் என்று வந்து 1975-ல் ஒரு கடையை தொடங்கி இன்று 135 கடைகள் நிறுவப்பட்டுள்ளது. இதை நான் எதற்கு கூறுகிறேன் என்றால் உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.
மாணவர்களாகிய நீங்கள் மனவலிமையுடன் எதிர்த்துப் போராட வேண்டும் அப்பொழுது வெற்றி பெற முடியும். ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு விதமான மன விருப்பங்கள் இருக்கும் சிலருக்கு இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என தோன்றும் சிலருக்கு ஆர்ட்ஸ் படிக்க வேண்டும் என தோன்றும் எதை தேர்ந்தெடுத்தாலும் மன உறுதியுடன் தேர்ந்தெடுங்கள் உங்கள் மனதிற்கு எது தோன்றுகிறதோ அதை நிறைவாக தேர்ந்தெடுங்கள், நான் இந்த இடத்தில் நிற்பேன் என எதிர்பார்க்கவில்லை அப்பாவின் மரணம் என்னை இந்த இடத்தில் நிற்க வைத்து இருக்கிறது.
இன்று ஏ. ஐ அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுகின்றனர். நாம் அதனை நல்ல விதத்தில் பயன்படுத்தி நவீன முறையில் பயன்படுத்த நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.நிறைவாக வசந்த் குழும செயலாளர் பேராசிரியர் சரவணன் நன்றியுரையாற்றினார்.