கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12_ம் வகுப்பில் இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவ,மாணவிகளுக்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு “வசந்த் அவார்ட்” 900 மாணவர்களுக்கு வழங்கி விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்தார்.


விஜய் வசந்த் இரண்டாவது முறையாக இன்று, முதல் கட்டமாக. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 300_மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கும் நிகழ்வு கன்னியாகுமரியை அடுத்துள்ள “ரோகிணி”பொறியியல் கல்லூரியில் உள்ள அரங்கில் நடைபெற்ற விழாவில் 300_மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் உடன் நினைவு பரிசும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் மாணவர்களின் பெற்றோர்களும் பங்கு பெற்றனர்.



மாணவர்கள் அவர்களது பெற்றோர்களிடம் கலந்துரையாடல் நடத்திய கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். மாணவர்கள் அவர்களது பள்ளி பாடத்தில் அதிகம் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெறவேண்டும். அவர்களை உற்சாகப்படுத்துவதே தனது நோக்கம் என தெரிவித்தார். நிகழ்வில் கல்லூரியின் தாளாளர், முதல்வர் பங்கேற்றனர்.
