கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் உள்ள ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தில் புதிதாக கட்டப்படவுள்ள பயணிகள் நிறற்கூடத்துக்கு விஜய் வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
ஆரோக்கியபுரம் ஊர்ப் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் செலவில் பயணிகள் நிற்கூடம் அமைய உள்ளது. இவ்வூர் தூய ஆரோக்கிய அன்னை கோயில் அருகாமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு மதுரை உயர்மறை மாவட்ட அருள்பணியாளர் சந்தியாகப்பன் தலைமை வகித்தார். விஜய் வசந்த் எம்.பி., அடிக்கல் நாட்டிப் பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அகஸ்தீசுவரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஆர்.தங்கம் நடேசன், முன்னாள் வட்டாரத் தலைவர் காலபெருமாள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜன், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் செயலர் .கிங்ஸ்லின், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலர் டி.தாமஸ், அகஸ்தீசுவரம் பேரூராட்சி கவுன்சிலர் கிறிஸ்டோபர், மாவட்ட காங்கிரஸ் அமைப்பு செயலர் இசக்கிபாண்டியன், கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், அகஸ்தீசுவரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், கொட்டாரம் பேரூர் வர்த்தக காங்கிரஸ் தலைவர் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஜவஹர், நெப்போலியன், சித்ரானந்த் ஆராச்சி, குணசேகர், ஜாண் போஸ்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.