• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பூம்புகார் படகு புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த்..,

கன்னியாகுமரி பூம்புகார் படகு போக்குவரத்து வளாகத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 41லட்சம் செலவில் அமையவிருக்கும் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை விஜய் வசந்த் எம்.பி., நாட்டினார்.

நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையர் கண்மணி, மாநில காங்கிரஸ் செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், காங்கிரஸ் விளையாட்டு துறை கிழக்கு மாவட்ட தலைவர் அருண், பூம்புகார் படகு துறை பொறியாளர் முருகன், தொழிற்நுட்ப மேலாளர் ஹரி நாராயணன், பூம்புகார் மக்கள் தொடர்பு அதிகாரி சவுந்தரபாண்டியன், கவுன்சிலர்கள் ஆனிரோஸ் தாமஸ், ஆட்லின், முன்னாள் கவுன்சிலர்கள் டி.தாமஸ், மெல்வின், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.