• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

“ரெட் பிளவர்” படத்தின் இரண்டாவது தோற்றத்தை சமூகவலைத் தளத்தில் வெளியிட்ட விஜய் சேதுபதி!

Byஜெ.துரை

Aug 9, 2024

‘ரெட் பிளவர்’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதிக்கு படத்தின் கதாநாயகன் விக்னேஷ் மற்றும் இயக்குனர் ஆண்ட் ரூ பாண்டியன் நன்றியை தெரிவித்தனர்.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ரெட் பிளவர்’ திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

‘ரெட் பிளவர்’ படத்தின் ட்ரைலரை விஜய் சேதுபதி பார்த்து பட குழுவினரை பாராட்டினார்.

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்துள்ள ‘ரெட்பிளவர்‘ திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு அடையாளமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தில் கதாநாயகியாக மனிஷா ஜஷ்னானி நடித்துள்ளார். படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான்விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபிகண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவாளராக தேவ சூர்யா, இசையமைப்பளராக சந்தோஷ் ராம், படத்தொகுப்பு அரவிந்த், விஷுவல் எஃபெக்ட்களை பிரபாகரன் மேற்பார்வையிட, கதை, திரைக்கதை வசனம் மற்றும் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன்.