• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தளபதி 67 படத்தில் 50 வயது தாதா கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்

ByA.Tamilselvan

Oct 8, 2022

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் தளபதி 67. இந்த படத்தின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் – விஜய் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். நந்தினி – தீனா இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தில் நடிகை மைனா நந்தினி மற்றும் விஜய் டிவி புகழ் தீனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.