புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடி கிராமத்தில் திமுக அதிமுகவை போல பாரதிய ஜனதா கட்சியின் பெண்களைக் கவரும் விதமாக பெண்களுக்கு தோடு ஜிமிக்கி வளையல் உள்ளிட்ட அலங்கார பொருட்களும் மின்னணு பொருட்களும் தயாரிக்கும் பயிற்சியை கொடுப்பதற்காக பெண்களை திரட்டி வருகிறது. அந்த வகையில் மகளிர் குழுக்களை திரட்டி கடந்த காலத்தில் ஆங்காங்கே செயல்பட்டு வந்திருக்கிறது. அந்தப் பெண்களை எல்லாம் புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடிக்கு வரவழைத்து நேற்று அந்த குடிசைத் தொழில்களின் அறிமுக விழா நடைபெற்றது. பாஜக மகளிர் குழு பெண்களிடம் திரைப்பட நடிகை குஷ்பு பேசினார்.

இந்நிகழ்வில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான புரட்சி கவிதாசன், மாவட்டத் தலைவர் என். ராமச்சந்திரன், முரளி உள்ளிட்டோர் முன்னிலையில் மாபெரும் பொதுக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பெண்கள் சிறு சிறு தொழில்கள் செய்து எவ்வாறு முன்னேற வேண்டும் அதற்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு எந்த மாதிரி உதவிகள் எல்லாம் செய்கின்றன என்பது குறித்து எல்லாம் விரிவாக திரைப்பட நடிகையும் நட்சத்திர பேச்சாளருமான குஷ்பு சுந்தர் பெண்கள் மத்தியில் பேசினார். இந்த நிகழ்வுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது என்று இங்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். அந்த அளவுக்கு பாரதிய ஜனதாவின் கட்சிக்கு இருக்கும் ஆதரவு பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
இந்தியா முழுவதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது. தமிழ்நாடு தனியாக இருக்க வேண்டுமென்று சில கட்சிகள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் தனியாக பிரிக்க வேண்டும் என்று திமுக ஆசைப்படுகிறது. பிரதமர் கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டுக்கும் தான் பிரதமர் கொடுக்கிறார். உலகத்திலேயே சிறந்த மொழி தமிழ் மொழி தான் என உலகம் முழுக்க பிரதமர் பேசி வருகிறார். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தேர்தல் தமிழ்நாடு தமிழ்மொழி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி எந்த நேரத்திலும் எந்த இடத்திற்கும் எங்கே லாபம் கிடைக்கிறதோ அங்கே போவார்கள். காங்கிரஸ் கட்சி பற்றி நாம் பேச வேண்டாம். விஜய் பற்றி தேர்தல் முடிந்து பேசலாம். தமிழ்நாட்டில் 1991 – 92 ஆம் ஆண்டு ரஜினி எப்படி இருந்தாரோ அது போல் இன்று விஜய் மிகப்பெரிய ஸ்டார் ஆக இருக்கிறார். நடிகர் விஜய் அவர்களைப் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும். அது வாக்குகளாக மாறுமா என்பது பற்றி நாம் இதற்கு முன்பு பலமுறை பார்த்திருக்கிறோம். நடிகரை பார்க்க கூட்டம் வரும் ஆனால் அது வாக்குகளாக மாறுமா என்பது பற்றி நாம் கூற முடியாது.
மக்களை ஏமாற்றும் வேலையை திமுக காங்கிரஸ் கூட்டணி செய்து கொண்டிருக்கிறது. மக்களை ஏமாற்றுவதற்கு ஏதோ ஒரு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்போது அந்த குரலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் இதுவும் பேசுவார்கள் இதற்கு மேலும் பேசுவார்கள். பாரத பிரதமர் மோடி அவர்கள் இளைஞர்கள் இளம்பெண்கள் மட்டுமல்லாது விவசாயிகளையும் கவர்வதற்கு பல பாலிசிகளை கொண்டு வருகிறார். அதனால் மக்கள் எங்களிடம் வருவார்கள். இந்த தேர்தலில் எங்களது ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார்.




