• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி! சூடு பிடிக்கும் ’வாத்தி கம்மிங்’….

By

Aug 29, 2021 , ,

கடந்த வருடம் தீபாவளியையொட்டி வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூல் சாதனை செய்தது. கொரோனா சூழலில் வெளியான படங்களில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் என்ற பெருமையும் ’மாஸ்டர்’ படத்திற்கு கிடைத்தது. இப்படத்தின் ’வாத்தி கம்மிங்’ பாடல், படம் வெளியாவதற்கு முன்பே இந்தியா முழுக்க வைரல் ஹிட் அடித்தது. இதனால், பாடலைப் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர் ரசிகர்கள்.

படம் வெளியான பிறகு, கடந்த ஜனவரி மாத இறுதியில்தான் ‘வாத்தி கம்மிங்’ வீடியோ பாடலை வெளியிட்டனர் படக்குழுவினர். படம் வெளியானதிலிருந்து இப்போதுவரை உலகம் முழுக்க ரசிகர்களும் பிரபலங்களும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள

 

அதுமட்டுமல்ல, இப்பாடல் ஹிட்டாலேயே அனிருத் விரைவில் ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு இசையமைப்பாளராக தெலுங்கில் அறிமுகமாகிறார் என்று சொல்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். இந்த நிலையில், ’வாத்தி கம்மிங்’ பாடல் வெளியான 7 மாதத்திலேயே யூடியூபில் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதோடு, இரண்டரை மில்லியன் லைக்ஸ்களையும் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை, விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.