• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஏப்.25, 26-ல் நீலகிரியில் துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநர் தொடங்கி வைக்கிறார்

ByA.Tamilselvan

Apr 23, 2022

நீலகிரியில் ஏப்.25, 26 தேதிகளில் நடைபெற உள்ள துணை வேந்தர்களின் மாநாட்டைஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு, நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வரும் 25, 26-ம்தேதிகளில் நடைபெறுகிறது. ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டை, ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில் புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு, 2047-ம் ஆண்டு இந்தியா முன்னணி என்ற கருத்துகளை மையப்படுத்தி கருத்தரங்கம் நடைபெறுகிறது.இந்த மாநாட்டில், யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதாக ஆளுநர் மாளிகையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.