விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர்கள் முருகேஸ்வரன், சங்கரநாராயணன், ஆகியோர் தலைமையில் மண்குண்டாம்பட்டி முக்கு ரோட்டில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது வெம்பக்கோட்டையில் இருந்து சிவகாசிக்கு சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை இட்டனர். சோதனையில் சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் 5 பெட்டிகள் , பேன்சி ரக வெடிகள் இரண்டு பெட்டிகள், மூன்று பெட்டிகளில் சோல்சா வெடிகள், மற்றும் மூலப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

உடனடியாக வெடிகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் உரிமையாளர் விஜயகரிசல் குளம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார்( வயது 25), ஆட்டோ டிரைவர் விளமரத்துபட்டியைச் சேர்ந்த காளிராஜ் (வயது23) என தெரிந்தது. உடனடியாக போலீசார் இருவரையும் கைது செய்தனர் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.