கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார் மஹாலஷ்மி தம்பதியினர். இவர்களது 13 வயது மகள் ஜனிக்கா ஸ்ரீ. வாசவி வித்யாலயா பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். சிறு வயதில் இருந்தே நாட்டுபுற பாடல்களில் ஆர்வம் கொண்ட அவர் சிறு சிறு நாட்டுப்புற பாடல்களை பாடி வருகிறார். இந்நிலையில் தற்போது கோவையின் பெருமையை பாடி ஆசத்தி உள்ளார். கோவையின் இயற்கை வளங்கள், கொங்கு தமிழ், கோவை சுற்று சூழல், கோவை மண்ணின் பெருமை ஆகியவற்றை பாடலாக பாடி வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த பாடல் வெளியாகி அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அவரது இந்த பாடலை கோவ மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.