உழைப்பால் உயர்ந்து அவரது “தொழில்”நிறுவனமான வசந்த் அன்கோ வை அவர் வாழ்ந்த காலத்திலே 90 கிளைகளுடன் நடத்தியவர். இன்று 118 கிளைகளுடன் செயல்படுகிறது.
வசந்த் அன்கோவின் அடையாள விளம்பரமே புன்னகை பூக்கும் அவரது முகம். புன்னகை மன்னன் என்ற அடையாள பெயருடன் வாழ்ந்தவர்.

வியாபாரத்தில் வெற்றி படிக்கட்டுகளில் பயணித்தவர் அரசியலிலும். குறிப்பாக பெரும் தலைவர் காமராஜர், ராஜீவ் காந்தி,அன்னை சேனியா ஆகியோருக்கு மிகுந்த மதிப்பு கொடுத்து வாழ்ந்தவர்.அவரது வாழ்நாளில் இரண்டு முறை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். இன்று அவரது அடிசுவட்டை பின் பற்றி அவரது மகன் விஜய் வசந்த் இடைத்தேர்தலிலும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


வசந்த் குமாரின் 4_வது நினைவு தினம் இன்று அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், அவரது குடும்ப உறுப்பினர்கள் கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் உட்பட காலையில் முதல் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து குமரி கிழக்கு மாவட்ட தலைவர் உதயம், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர்.பினுலால்சிங், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் பூரூஸ், கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வகுமார், முன்னாள் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள், நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் நவீன், பல்வேறு பேரூராட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.


நினைவிடத்தில் உள்ள வசந்தகுமரியின் சிலைக்கு வந்தவர்கள் எல்லாம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
